பட்டுக்கோட்டையில் போட்டியிட போவதில்லை! M.L.A.ரங்கராஜன்!

என் உயிரினும் மேலான பட்டுக்கோட்டை மக்களுக்கு எனது வணக்கம்,மூன்று முறை என்னை வெற்றி பெற செய்தமைக்காக எனது நன்றிகள்.

  என்னை அரசியலில் அறிமுகபடுத்திய மக்கள்தலைவர் ஐயா மூப்பனார் குடும்பத்தினர்,தலைவர் ஐயா Gk வாசன் ஆகியோருக்கு நன்றி.

 தேர்தலில் வெற்றி பெற அரும்பாடுபட்ட இயக்க நண்பர்கள் , கூட்டணிக்கட்சி நண்பர்கள், எனது உறவினர்கள்,நலம்விரும்பிகள்,அனைத்து நல்ல உள்ளங்ககளுக்கும் நன்றி, நன்றி

அதீத பாசம் கொண்ட சிறுபான்மை மக்களுக்கு நன்றி,

 தனிப்பட்ட காரணமாக தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவெடுத்து என் பாசமுடைய தலைவர் Gk வாசன் அவர்களிடம் 6 மாதம் முன்பே தெரிவித்துவிட்டேன்.

நான் பதவியில் இருந்த நாட்களில் எந்த முறை கேடுகளிலிலும் ஈடுபடாமல் பட்டுக்கோட்டை மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளேன்.

பட்டுக்கோட்டைக்கு எனது முயற்சியின்காரணமாக சட்டமன்ற கோரிக்கை காரணமாககீழ்கண்ட முக்கிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன,

2006-2011

1.புறவழிச்சாலை திட்டம் ஒரு பகுதி ரூ 7.50 கோடி யில் நிறைவேற்றப்பட்டது,

2.வட்டார போக்குவரத்து அலுவலகம் (Rto) அமைக்கப்பட்டது,

3.புதிய தாலுகா காவல் நிலையம் அமைக்கப்பட்டது,

4.இரண்டு துணைமின்நிலையங்கள் தாமரங்கோட்டை மற்றும் துவரங்குறிச்சி ல் அமைக்கப்பட்டது

5.தென்னை வணிக வளாகம் அமைக்கப்பட்டது.

100 க்கு மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கப்பட்டது

2011-16

1.புறவழிச்சாலை இரண்டாம்கட்ட பணிகளுக்கு 24.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்துடெண்டர் விடப்பட்டுள்ளது, தேர்தல் முடிந்தவுடன் பணிகள் தொடங்கும்.

2. பட்டுக்கோட்டை நகராட்சி பொன் விழா ஆண்டை முன்னிட்டு 25 கோடி சிறப்பு நிதி பெறப்பட்டு நகரில் சாலை மேம்பாடு செய்யப்பட்டது.

3.கரம்பயம் மற்றும் கீழக்குறிச்சியில் புதிய துணை முன் நிலையங்கள் 9 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன,

4. அதிரை, நாட்டுச்சாலை, மற்றும் தம்பிக்கோட்டை ஆகிய இடங்களில் துணை மின் நிலயம் அமைக்கப்பட நிலம் கையகப்படுத்தப்பட்டு டெண்டர் விடப்படும் நிலையில் உள்ளது.

5. சட்டமன்ற உறுப்பினர் நிதி முறையாக பயன் படுத்தப்பட்டு உள்ளது.ஃ

அனைத்து நல்ல உள்ளங்ககளுக்கும் மீண்டும் நன்றி, நன்றி

 பணி தொடரும்

Close