ம.தி.மு.க வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! 3 இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு!

மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கோவில்பட்டி தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். சென்னையில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கிய வைகோ, 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பெயர்களை அறிவித்தார்.

அதன்படி திருப்போரூரில் மல்லை சத்யா, ஆவடியில் அந்தரிதாஸ், ஆயிரம் விளக்கு தொகுதியில் ரெட்சன் அம்பிகாபதி, அண்ணாநகரில் மல்லிகா தயாளன், துறைமுகம் தொகுதியில் முராத் புகாரி, பாளையங்கோட்டையில் கே.எம்.ஏ. நிஜாம், சங்கரன்கோவிலில் சதன் திருமலைக்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

காரைக்குடியில் செவந்தியப்பன், ஆலங்குடியில் சந்திரசேகரன், செஞ்சியில் ஏ.கே.மணி, சிங்காநல்லூரில் அர்ஜூன் ராஜ், குளச்சலில் சம்பத் சந்திரா, திருச்சி கிழக்கு தொகுதியில் ரொஹையா சேக் முகமது, நாகர்கோவிலில் ராணி செல்வின் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தூத்துக்குடியில் பாத்திமா பாபு, மதுரை தெற்கு தொகுதியில் பூமிநாதன், ஆற்காடு தொகுதியில் உதயகுமார், கிணத்துக்கிடவு தொகுதியில் ஈஸ்வரன், உசிலம்பட்டியில் பாஸ்கர சேதுபதி, சாத்தூரில் ரகுராமன், பூவிருந்தவல்லியில் கந்தன், பல்லடத்தில் முத்துரத்தினம், ஈரோடு மேற்கு தொகுதியில் முருகன், ஜெயங்கொண்டம் தொகுதியில் கந்தசாமி, அரவக்குறிச்சியில் கலையரசன், முதுகுளத்தூரில் ராஜ்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்

Close