இஸ்லாமிய பெண்கள் செருப்பை விட மேலானவர்கள் அல்ல! பா.ஜ.க எம்.பி சர்ச்சை பேச்சு!

சர்ச்சை பேச்சுக்களால் புகழ்பெற்ற பா.ஜ., எம்.பி., சாக்ஷி மகராஜ், கோயில் கருவறைக்குள் சென்று பெண்கள் வழிபாடு நடத்துவதற்கு உரிமை அளிக்கும் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது, செருப்பை விட இஸ்லாமிய பெண்கள் ஒன்றும் மேலானவர்கள் இல்லை. கோயில் கருவறைக்குள் பெண்கள் செல்ல வேண்டும் என கூறுபவர்கள் முதலில் மசூதிகளுக்குள் பெண்கள் சென்று நமாஸ் செய்வதற்கு சட்டரீதியான அங்கீகாரம் அளிக்க குரல் கொடுக்கட்டும். இந்த நாடு அரசியலமைப்பு சட்டங்களால் நடத்தப்பட வேண்டும். இனவாதிகளால் அல்ல என தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Close