அதிரை மக்களின் தூக்கத்தை கெடுத்த 7 மணி நேர மின் தடை!

அதிரையில் நேற்று இரவு 11:15 மணியளவில் மின் தடை ஏற்பட்டது. இந்த வெயில் காலத்தில் சில நிமிடங்கள் கூட ஏசி அல்லது மின்விசிரி இல்லாமல் இருக்க முடியாது. ஆனால் நேற்று நள்ளிரவு மின்சாரம் வரும் வரும் என காத்திருந்த பெரும்பாலான மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 

அதிரைக்கும் மின் இணைப்பில் ஏற்பட்ட பழுது காரணமாக இந்த மின் வெட்டு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இறுதியாக இன்று அதிகாலை மின்சாரம் வழங்கப்பட்டது.  இந்த தொடர் மின் வெட்டு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் சிரமத்திற்குள்ளாகினர். 

Close