அதிரையில் இன்று துவங்குகிறது AFFA வின் கால்பந்தாட்ட தொடர் போட்டி

வருடா வருடம் கோடை விடுமுறை தினங்களில் பகல் நேரத்தில் மக்களுக்கு பொழுதுபோக்குக்காகவும் இளம் கால்பந்தாட்ட வீரர்ககளை ஊக்குவிப்பதற்க்காகவும் அவர்களின் திறமைகள் வெளிகொணர்வதற்காகவும் அதிரை ஃப்ரண்ட்ஸ் புட்பால் அசோசியேசன் AFFA அணி சார்பாக கடந்த பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இன்று இந்த ஆண்டுக்கான கால்பந்தாட்ட தொடர்போட்டி துவங்கி நடைபெறவுள்ளது. இன்று மாலை சரியாக 4:30 மணிக்கு தொடங்கும் இப்போட்டி வழக்கம் போல ஷிபா மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள கிராணி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் பலம் வாய்ந்த திருச்சி மற்றும் நாகூர் அணியினர் பலப்பரிட்சை நடத்துகின்றனர்.

இதனை கண்டுகளிக்க அனைவரும் வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Close