மேலும் உயர்ந்தது பெட்ரோல் டீசல் விலை!

பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்‌ளுக்கு ஏற்ப மாதமிரு முறை பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்கும் எண்ணெய் நிறுவனங்கள், நள்ளிரவு முதல் புதிய விலையை அறிவித்துள்ளன.

அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 6 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 94 காசுகளும் அதிகரிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 ரூபாய் 58 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 48 ரூபாய் 76 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

Close