பட்டுக்கோட்டை SDPI வேட்பாளர் இலியாஸ் சென்ற கார் தாக்குதல்! WPI கண்டனம்!

பட்டுக்கோட்டை தொகுதியில் SDPI கட்சி வேட்பாளர் மற்றும் வாக்குசேகரிக்கச் சென்ற கட்சியினர் மீது தமாகா கொடி பொருத்தப்பட்ட வாகனத்தில் வந்தோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறபபடுகிறது.

இதில் வேட்பாளர் பயன்படுத்திய வாகனம் சேதப்படுத்தப்பட்டதொடு , உடனிருந்த எஸ்.டி.பி.ஐ. தொண்டர்கள் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதாக கூறபபடுகிறது..

இதை வெல்ஃபேர் பார்ட்டி வன்மையாக கண்டிக்கிறது.

ஜனநாயக நாட்டில் தேர்தலில் போட்டியிடவும்,

தங்கள் கட்சிக்காக மக்களிடயே பிரச்சாரத்தில் ஈடுபடவும், மாநில – மத்திய அரசின் நிறைகுறைகள் குறித்து விமர்சிக்கவும் எல்லோருக்கும் முழு உரிமை உண்டு.

இதை சகிக்காமல், வன்முறைத் தாக்குதலில் ஈடுபடுவது கோழைத்தனமான செயல்பாடாகும்.

சம்பந்தப்பட்ட விவகாரம் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளை உடனடியாக அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெல்ஃபேர் பார்ட்டி கேட்டுக் கொள்கிறது.

இது போன்ற விசயங்களை காவல்துறை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தி, இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எஸ்.என். சிக்கந்தர்,

மாநிலத்தலைவர் –

வெல்ஃபேர் பார்ட்டி

தமிழ்நாடு

Close