அதிரை பேருந்து நிலையத்தில் பரபரப்பு! அதிரையில் மதுக்கடையை மூட திடீர் ஆர்ப்பாட்டம்! (படங்கள் இணைப்பு)

கடந்த ஒரு ஆண்டாக தமிழகத்தின் ஹைலைட்டான டாப்பிக்காக இருந்து வருவது மதுவிலக்கு. சசிபெருமாள் மரணம் முதல் கோவனின் சர்ச்சை பாட்டு வரை அனைத்துமே இந்த மதுவிலக்கு போராட்டத்துக்கு வலுவாக அமைந்தன. இந்நிலையில் அரசியல் கட்சிகளும் இதனை கையில் எடுத்து தேர்தல் அறிக்கை வெளியிட்டனர்.

இது ஒரு புறம் இருக்கட்டும். நமதூர் அதிரையில் முத்துப்பேட்டை ஈசிஆர் சாலை, பட்டுக்கோட்டை சாலை, ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளன. இதில் குடித்து விட்டு நாள் தோறும் குடிமகன் கள் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் உயிர்சேதங்களும் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு “மக்கள் அதிகாரம்” அமைப்பினர் இன்று காலை பேருந்து நிலையம் முதல் முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையோரம் அமைந்துள்ள மதுக்கடையை மூட வலியுறுத்தி பேரணியாக சென்று ஆர்பாட்டம் செய்ய முற்பட்டனர். இதனை அடுத்து காவல்துறையினரின் தலையீட்டின் கீழ் ஆர்பாட்டம் நிறுத்தப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

IMG_7025

படங்கள் மற்றும் செய்தி: இஜாஸ் மற்றும் சாலிஹ் (அதிரை பிறை)

Close