103 வயதில் ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அஸ்கர் அலி

மேற்கு வங்க சட்டமன்றத்திற்கு 5வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் கூச்பிகார் மாவட்டத்தில் தின்ஹட்டா கிராமத்தில் 103 வயது முதியவர் ஒருவர் வாக்களித்தார். அஸ்கர் அலி என்ற அந்த முதியவரை கிராமத்தவர்கள் சிலர் கைத்தாங்கலாக வாக்குச் சாவடிக்கு அழைத்து வந்தனர்.

வாக்களித்தபின் மையிடப்பட்ட விரலை உயர்த்திக் காட்டி ஜனநாயக கடமை ஆற்றிய மகிழ்ச்சியை சக வாக்காளர்களிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.

Close