அதிரை த.மு.மு.க அலுவலகத்தில் நடைபெற்ற தி.மு.க கூட்டனியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் தேர்தல் பணிகள் சூடு பிடிக்க துவங்கிவிட்டது. இன்னும் தேர்தலுக்கு சுமார் 10 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகள் முடுக்கி விட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டனியின் தேர்தல் ஆலோசனைக்கூட்டம் இன்று மாலை மணியளவில் தமுமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைய வைப்பது எப்படி? தேர்தல் பிரச்சாரங்களை எந்தெந்த கோணங்களில் மேற்கொள்வது போன்று ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இதில் அதிரை நகர தி.மு.க செயலாளர் இராம.குணசேகரன், தி.மு.க தேர்தல் பணிக்குழு தலைவர் ஜலீலா முஹம்மது முஹைதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிரை நகர தலைவர் K.K.ஹாஜா, தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா, காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் கூட்டனி கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.WhatsApp-Image-20160505-1 WhatsApp-Image-20160505-2 WhatsApp-Image-20160505-4 WhatsApp-Image-20160505-5 WhatsApp-Image-20160505-6 WhatsApp-Image-20160505-7 WhatsApp-Image-20160505-8 WhatsApp-Image-20160505-9 WhatsApp-Image-20160505-10 WhatsApp-Image-20160505-11

Close