பட்டுக்கோட்டையில் திடீர் தீ விபத்து!
பட்டுக்கோட்டை வண்டிப்பேட்டையில் உள்ள ராக்கம்மாள் பர்னிச்சருக்கு சொந்தமான மரம் அறுக்கும் மில்லில் அறுத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் தீயில் கருகி அழிந்தன.
இன்று அதிகாலை நான்கு மணியளவில் மில்லில் உள்ள மரங்கள் தீப்பிடித்து எரிந்ததை தொடர்ந்து அருகில் உள்ளவர்கள் மில் உரிமையாளர் பெரியசாமிக்கு தகவல் கொடுத்துவிட்டு தீயை அனைத்துள்ளனர். பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு தீயனைப்பு வாகனங்கள் வந்து தீயை அனைத்தனர். பட்டுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான குடிதண்ணீர் டேங்கர் லாரியில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து தீயனைப்புத்துறையினருக்கு உதவினர்.
இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்க முடிந்தது. இல்லை என்றால் அந்த பகுதி முழுவதுமே மரக்குடோன்கள் மற்றும் மரம் வியாபாரம் செய்யும் கடைகள் இருப்பதால் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும் , அந்த வகையில் அந்தபகுதி பொதுமக்கள் மற்றும் தியனைப்புத்துறையினர் விரைந்து செயல்பட்டு பெரும் விபத்தினை தடுத்துவிட்டனர்.
இந்த தீ விபத்து திட்டமிட்ட சதி என்றும் கடை வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோல் மூலம் வேண்டாத நபர்கள் இந்த விபத்தினை ஏற்படுத்தி இருக்கலாம் என பாதிக்கப்பட்ட பெரியசாமி கூறினார
-pattukkottainews