ஹஜ்ஜு செய்ய தீவிரவாதிகள் வருகின்றனர்! விசமத்தனமான செய்தியை வெளியிட்ட மாலை மலர்!

இன்று மாலை மலரில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதில் ஹஜ்ஜு செய்வதை பற்றி ஒரு செய்தி வெளியிடப்பட்டது. 

இந்த பதிவின் ஒரு பத்தியில் “உலகம் முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லிம் மக்களால் மெக்கா நகரம் போற்றப்பட்டுள்ளது. ஷியா, ஷன்னி, மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று எந்தப் பிரிவினை சேர்ந்தவர்களாக இருக்கும்போதிலும் அனைவரும் ஒன்றுகூடும் இடமாக மெக்காவின் புனித மசூதி விளங்குகிறது” என்று எழுதப்பட்டுள்ளது.

இதனை படித்த முஸ்லிம்கள் பலர் மாலை மலரின் இந்த விசம் தீட்டப்பட்ட கருத்தால் கடும் கொதிப்படைந்து தங்கள் முகநூலில் தங்கள் எட்திர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பின்னர் சில மணி நேரங்களுக்கு பிறகு அந்த செய்தியில் உள்ள சர்ச்சைக்குறிய பத்தியை நீக்கியுள்ளனர்.

அந்த பதிவை பார்க்க:

https://www.maalaimalar.com/2014/10/02082111/Saudi-overhaul-reshapes-Islams.html

Advertisement

Close