லண்டனில் தமிழர்களால் 6 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பள்ளிவாசல் “மஸ்ஜித் இ பிலால்”

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தமிழர்கள் ஆயிரக்கணக்கானோர் பணி நிமித்தமாக தங்கி வருகின்றனர். இவர்கள் ஒன்றினைந்து லண்டன் குரைடனில் உள்ள ப்ரிஜ்ஸ்டோக் சாலையில் உள்ள கட்டிடத்தின் தரைத்தளத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் தணிதணியாக தொழுவதற்க்கான பள்ளிவாசலுக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கினர். இதற்காக   மொத்தம்  இந்திய மதிப்பில் 6 கோடி ரூபாய்க்கு மதிப்பீடு போடப்பட்டு நிதி வசூல் செய்யப்பட்டது. 

இதற்க்கு பல தரப்பில் இருந்தும் நிதிகள் கிடைக்கப்பெற்று தற்பொழுது சுமார் 3 கோடி ரூபாய் வரையிலான அதன் உள்கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று ஓரளவு பூர்த்தியாகிவிட்டது. இன்னிலையில் இந்த பள்ளிக்கு வரும் மே 22 (ஞாயிற்றுகிழமை) அன்று திறப்புவிழா நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. 

இதில் இலங்கை ACJU தலைவர் அஷ் ஷேக் ரிஜ்வி முஃப்தி அவர்கள் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றுகின்றார்கள். மேலும் இதனை தொடர்ந்து மார்க்க சொற்பொழிவாளர் மௌலவி அப்துல் பாஸித் புஹாரி அவர்களும் கலந்துக்கொண்டு மார்க்க சொற்பொழிவாற்ற உள்ளார்கள். 

மேலும் இதில் தற்போது லண்டன் தேர்தலில் வெற்றி பெற்று முதல் இஸ்லாமிய மேயராக மேற்கு மாகாணத்திற்கு பதிவியேற்ற சாதிக் கான் அவர்களும் வருகைதரவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் லண்டனில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

குறிப்பு: முன்பு நாம் கூறியது போல் 6 கோடி தேவை என நிர்ணயம் செய்யப்பட்டு தற்பொழுது 3 கோடி வரை தான் கிடைத்துள்ளது. இதில் நீங்கள் நிதி உதவி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 


Close