அதிரை ரஹ்மானியா மதர்ஸா பட்டமளிப்பு விழாவிற்கு வருபவர்களுக்கு கீழத்தெரு இளைஞர்கள் சார்பில் மோர் விநியோகம்! (படங்கள் இணைப்பு)


அதிரையில் ரஹ்மானியா மதர்ஸாவின் 100 வது ஆண்டுவிழா மற்றும் பட்டமளிப்பு விழா இன்று காலை முதல் சிறப்பாக துவங்கி நடைப்பெற்று வருகின்றது. பல பகுதிகளில் இருந்தும் 1000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அதிரைக்கு வருகை தந்தவாறு உள்ளனர். விழா பந்தல் மக்கள் நிரம்பியுள்ளது. மேலும் விழாவில் நடைப்பெறும் மார்க்க சொற்பொழிவுகளை பொதுமக்கள் கேட்கும் வண்ணமாக பல பகுதிகள் ஒளிபெருக்கிகள் கட்டப்பட்டுள்ளது.

மேலும் கடும் வெயில் அடித்து வருவதால் வெயிலில் விழாவிற்க்கு வரும் மக்களின் தாகம் தணிக்க அதிரை கீழத்தெரு இளைஞர்கள் சார்பில் தம்பி மளிகை எதிரே செல்லும் சாலையில் மோர் பந்தல் போடப்பட்டு விழாவுக்கு வருபவர்களுக்கு மோர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.


Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close