புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்ற SDPI கட்சியை சேர்ந்த சம்சுன் மஹரிபா !

 காலியாக உள்ள புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு SDPI கட்சியின் சார்பில் சம்சுன் மஹரிபா போட்டியிட முடிவு செய்தார்.

இதையடுத்து தஞ்சை தெற்கு மாவட்டத்  தலைவர் Z. முகம்மது இலியாஸ், புதுப்பட்டினம் ஜமாஅத் தலைவர் அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து மாற்று வேட்பாளர் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் ஊராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து இன்று காலை 11.00 மணி அளவில் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏற்பு நிகழ்ச்சி புதுப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது  .இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்டத்  தலைவர் Z. முகம்மது இலியாஸ்,புதுப்பட்டினம் ஜமாஅத்தார்கள் ,SDPI கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .

Advertisement

Close