பட்டுக்கோட்டையில் நேற்று இரவு அதிமுக நிர்வாகி தற்கொலை முயற்சி !

பட்டுக்கோட்டை நகராட்சியின் 10வது வார்டு மன்னை நகர் பகுதியை சேர்ந்தவர். இவர் அதிமுக வின் பட்டுக்கோட்டை நகர மீனவர் சங்க இணைச்செயலாளராக இருக்கிறார். நேற்று மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு தீர்ப்பு வெளியான உடன் மனம் உடைந்த நிலையில் இருந்தவர் இரவு விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். அவர் விஷம் சாப்பிட்டதை கேள்விப்பட்ட தெருவாசிகள் அவரை உடனடியாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டு இன்று காலை ஆபத்தான கட்டத்தை தாண்டியதாக மருத்துவர்கள் கூறியதை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் பட்டுக்கோட்டை நகர செயலாளர் ஜவகர்பாபு, நகரசெயலாளர் பாரதி, மாவட்ட அணி சேரா ஓட்டுநர் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர், கவுன்சிலர்கள் மயில்வாகணன், மாஸ்கோ, செல்ல நாகராஜன், பிரபு, பாசறை நகர இளைஞரணி செயலாளர் பாண்டியராஜன், உள்பட பலர் அவரை சென்று சந்தித்து ஆறுதல் கூறினர். இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் நகரமுழுவது வெறிச்சோடி காணப்படுகிறது. அங்கொண்றும் இங்கொண்றுமாக சில கடைகள் மட்டும் திறந்துள்ளன. பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்படுகின்றன.

நன்றி :
pattukottai news time

Advertisement

Close