அதிரையில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம்!

கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக அனல் பறக்க நடந்து வந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது.

ஓட்டுப்பதிவு தினமான 16ம் தேதி மாலை 6:00 மணி வரை, தேர்தல் தொடர்பான நிகழ்ச்சிகளை, ‘டிவி’ மற்றும் சமூக வலைதளங்களில், வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களின் அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்றும், அவர்களின் புகைப்படங்கள், சின்னங்கள் போன்றவற்றை காண்பிக்கக் கூடாது என்றும், மீறி ஒளிபரப்பினால், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி எச்சரித்துள்ளார்.

Close