ஓட்டுப்போடுவதற்க்காக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள்

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு பொதுமக்கள் படையெடுத்ததால் சென்னை கோயம்பேட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்து ஊருக்கு சென்று வருகின்றனர். இதேபோல் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்றதால் கோயம்பேட்டில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும், போதுமான பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம்சாட்டினார். பொதுமக்கள் சிலர் பேருந்துக்காக இரவு முழுவதும் காத்திருந்ததால் பெரும் சிரமம் அடைந்தனர்.

Close