விரைவில் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள்!

சட்டசபை தேர்தலுக்கு முன், ‘ஸ்மார்ட்’ கார்டு வடிவில், புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்காக, முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டன. தற்போது, புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள், 2005ல் வழங்கப்பட்டன; அதன் செல்லத்தக்க காலம், 2009ல் முடிந்தாலும், உள்தாள் ஒட்டப்பட்டு, ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

தற்போது ஓட்டப்பட்டுள்ள உள்தாள்கள், டிசம்பர் மாதம் வரை தான் செல்லுபடியாகும்.தமிழகத்தில், விழி, விரல் ரேகை; புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய, ‘ஆதார்’ அடையாள அட்டையை, மத்திய அரசு வழங்கி வருகிறது.அதனால் போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க, மத்திய அரசிடம் இருந்து, ‘ஆதார்’ விவரங்களை பெற்று, ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’ வழங்க, உணவுத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.இத்திட்டத்திற்கு, ஒப்புதல் அளித்து, தமிழக அரசு, 2014, செப்., 16ல், அரசாணை வெளியிட்டது. 

ஸ்மார்ட் ரேஷன் கார்டு மென்பொருள் தயாரித்தல், செயல்படுத்துதல், பராமரித்தல், மேலாண்மை உட்பட, ஒருங்கிணைந்த பணிகளை, தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக நடந்த, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தேர்வுக்கான டெண்டரில், ஆம்னி அகேட் சிஸ்டம்ஸ், எஸ்.ஆர்.ஐ.டி., இந்தியா என, இரண்டு நிறுவனங்கள் பங்கேற்றன.

இதில், ஆம்னி நிறுவனம் தேர்வான நிலையில், அந்நிறுவனத்திடம், ‘ஸ்மார்ட்’ கார்டு பணி, ஜனவரியில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுக்கு தேவையான மென்பொருளை உருவாக்க, சென்னை சேப்பாக்கம், எழிலக வளாகத்தில் உள்ள, ஒரு ரேஷன் கடையில், மக்களிடம் இருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close