அதிரையில் வாடிக்கையாகும் இரவு நேர மின்வெட்டு! என்ன காரணம்?

கோடை நேரத்தில் பொதுமக்களுக்கு மிகவும் அவசியமாக அமைவது மின்சாரம். மின்சாரம் இல்லாவிட்டால் இந்த வெப்பம் அவர்களை படாதபாடு படுத்தி விடுகிறது. அந்த வகையில் இந்த தேர்தல் பணிகள் துவங்கியதில் இருந்தே இரவு நேரங்களில் மின் தடை என்பது வாடிக்கையாகி விட்டது. இது குறித்து மின்சார வாரியத்தை தொடர்பு கொண்டால் பெரும்பாலான சமயங்களில் அவர்கள் துண்டித்து விடுகிறார்கள்.

அதனை மீறி ஒரு சிலர் எடுத்தாலும் மின்சார பழுது, ட்ரான்ஸ்பார்மர் பழுது என்று காரணத்தை கூறுகின்றனர். ஆனால் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதால் மக்கள் மத்தியில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது

Close