அதிரையில் ஓட்டுப் போட வந்தவர்களின் பைக்கை பஞ்சர் செய்த பாதுகாப்பு படையினர்! கடும் பரபரப்பு! ( படங்கள் இணைப்பு)

அதிரையில் பல பகுதிகளில் வாக்குப்பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிரை மேலத்தெரு சூனா பள்ளிக்கூடத்திலும் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கு வாக்களிக்க பைக்குகளில் வந்த சிலர் பைக்குகளை அனுமதிக்கப்படாத இடத்தில் நிறுத்தியதாக கூறி அவர்களின் பைக்குகளை  பாதுகாப்பு படையினர் பஞ்சர் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பைக் ஓட்டிகள் போலிசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 10 நிமிடங்கள் வாக்குப்பதிவில் பாதிப்பு ஏற்பட்டன.

ஒரு சிலர் தங்கள் ஜனநாயக கடமையை மறந்து வாக்களிக்காமல் வீட்டில் இருப்பவர்களுக்கு மத்தியில் தங்கள் கடமையை உணர்ந்து வாக்களிக்க வரும் பொதுமக்களிடம் பாதுகாப்பு படையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் கடுகடுப்புடன் நடந்துகொள்வதால் மக்களுக்கு வாக்களிக்கும் ஆர்வம் குறையவும் வாய்ப்புகள் உள்ளது. b531e862-a999-4559-a3e7-bf3a327e5a98

Close