சவூதியில் ஜும்மா தொழுகைக்கு பிறகு நடைப்பெற்ற குண்டு வெடிப்பில் பலர் மரணம்! (வீடியோ இணைப்பு)

கிழக்கு சவுதி அரேபியாவில் அல் குவடாக் நகரில் உள்ள இமாம் அலி மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையில் ஈடுபட்டு இருந்தபோது அங்கு தற்கொலை படை தீவிரவாதி ஒருவன் தான் அணிந்து இருந்த குண்டை வெடிக்க செய்தான். இந்த தாக்குதலில் பலர் உயிர் இழந்தனர்.
இந்த பள்ளியில் 150 க்கும் மேற்ட்டவர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர் எனவும் இதில் 30 பேர் வரை பலியாகி இருக்க கூடும் எனவும் நேரில் பார்த்தவர் கூறி உள்ளார்.
நாங்கள் முதல் பகுதி தொழுகையில் ஈடுபட்டு இருந்த போது வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டேன். என நேரில் பார்த்த கமல் ஜாபர் ஹசன் என்பவர் ராய்ட்டர் செய்தி ஏஜென்சிக்கு டெலிபோன் மூலம் கூறி உள்ளார்.
சவுதி அரசு செய்தி ஏஜென்சி வெடுகுண்டு தக்குதல் நிகழ்ந்ததை உறுதி படுத்தி உள்ளது. பாதிக்கபட்டவர் ஒருவர் ரத்தம் தோய்ந்த படத்தை சோசியல் மீடியாவில் போட்டு உள்ளார்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close