துல் ஹஜ் மாதத்தை அடைந்து விட்டோம் ! சவுதி அரேபியாவில் பிறை தென்பட்டது ! அக்டோபர் 4 ஆம் தேதி சனிக்கிழமை பெருநாள் !

  சவுதி அரேபியாவில் ஐந்து பேர் துல் ஹஜ் பிறையைக் கண்டதாக சபக் இணையம், அல் ரியாத் இணைய செய்திச் சேவையும் செய்தி வெளியிட்டுள்ளது. இதனை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

நாளை வியாழன் துல் ஹஜ் பிறை ஒன்று இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 3ஆம் தேதி  வெள்ளிக்கிழமை அரபா தினம் மற்றும் மறுநாள் அக்டோபர் 4ஆம் தேதி சனிக்கிழமை பெருநாள்.

அல்லாஹ்வால் புனிதப்படுத்தப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றான துல் ஹஜ் மாதத்தை அடைந்து கொண்ட நாம் இம் மாதத்தின் முதல் ஒன்பது நாற்களும் நோன்பு இருக்க முயற்சிப்போம்.

மேலும் அதிகமதிகமாக அல்லாஹ்வை துதித்து அவனது ஞபகத்தோடு உபரியான தொழுகைகளிலும் அதிகம் கவணம் செலுத்துவோம்.
குறிப்பாக அல்லாஹ்வின் புனித வேதமாகிய அல்குர்ஆனுடன் நெருங்கிய தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்வோம்.

மேலும் துல் ஹஜ் ஒன்பதாவது நாள் அதாவது அரபா நாளில் கட்டாயமாக (ஹஜ்ஜூக்கு செல்லாத மக்கள்) நோன்பு வைத்து ஒரு வருடம் முன் செய்த பாவங்களையும் எதிர்வரும் ஒரு வருடம் செய்ய இருக்கும் பாவத்தையும் போக்கிக் கொள்ள முயற்சிப்போம் 

Advertisement

Close