ஒரு ரூபாய் கூட கொடுக்காமல் 20,000 ஓட்டுகள் பெற்ற ஆளூர் ஷானவாஸ்!

ஒரு ரூபாய் கூட வாக்காளர்களுக்குக் கொடுக்காத எனக்கு 20,000 பேர் ஓட்டுப் போட்டுள்ளனர். அதற்காக நான் ஆறுதல் அடைகிறேன், நம்பிக்கையும் பெறுகிறேன் என்று குன்னம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.image

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதியில் போட்டியிட்டார் வி்டுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஷாநவாஸ்.
இத்தொகுதிக்குட்பட்ட அங்கனூர்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சொந்த ஊர் என்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் படு தீவிரமாக வேலை பார்த்தனர், பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். ஆனாலும் ஷாநவாஸ் தோல்வியைத் தழுவியுள்ளார்.

Close