அதிரையில் சிறப்பாக நடைப்பெற்ற மாரத்தான் ஓட்டப்போட்டி! (படங்கள் இணைப்பு)

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் நடத்தும் மக்கள் சங்கமம் மாநாடு எதிர்வரும் மே 29,30 ஆகிய இருதினங்கள் அதிராம்பட்டினம் சித்திக் பள்ளி வளாகத்தில் நடைபெறள்ளது.

இந்த, மக்கள் சங்கமம் மாநாட்டை முன்னிட்டு இன்று(22-05-2015) மாலை 4 மணியளவில் அதிரை பேருந்து நிலையத்தில் மினி மாரத்தான் ஓட்ட போட்டி பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் டிவிசன் தலைவர் வழக்கரிஞர் நிஜாம் மற்றும் டிவிசன் செயலாளர் அஜ்மல் ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.
இதில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் ஹாஜா, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் z.முகம்மது இலியாஸ் மற்றும் கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் z.முகம்மது தம்பி BA.BL ஆகியோர் முன்னிலையிலும், சிறப்பு அழைப்பாளராக மேலத்தெரு PMK.தாஜூதீன் அவர்கள் கலந்து கொடி அசைத்து தொடங்கிவைத்தார்.
 வெற்றியாளர்கள் விபரம்
முதல் இடம்:- முத்துபாண்டி
இரண்டாம் இடம்:- அசரூதீன்
முன்றாம் இடம்:- பிரவீன்குமார்.இந்த போட்டியில் நுற்றுக்கும் மேற்ப்பேற்ற இளைஞர்களும்,பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
                                       இப்படிக்கு
                                  மக்கள் சங்கமம் மாநாடு,
                                  செய்தி தொடர்பாளர்.Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்
Close