ஹரியானாவில் 51℅திற்க்கும் அதிகமானோர் தோல்வி!

image

ஹரியானா மாநிலத்தில் 51 சதவிகிதத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் தங்களது 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர்.
ஹரியான மாநிலத்தில் 3.17 லட்சம் மாணவ மாணவிகள் தங்களது 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை இவ்வருடம் எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளன. 48.8 சதவிகித மாணவ மாணவிகளே தேர்ச்சி பெற்றுள்ளனர். 51 சதவிகிதத்திற்கும் மேலான மாணவ மாணவிகள் தோல்வியை தழுவியுள்ளனர். கடந்த ஆண்டு 45.8 சதவிகிதமே தேர்ச்சி இருந்த நிலையில் இந்த வருடம் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக வெளியான சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவில் ஹரியானாவில் 84.11 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். மேலும் நாட்டின் 2-வது மற்றும் 3-வது இடத்தையும் இம்மாநில மாணவியரே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Close