அதிரையில் எப்புடி இருந்த கரிசல்மணி குளம், இப்புடி ஆயிடுச்சு!

அதிரை பட்டுக்கோட்டை சாலையில் அமைந்த்துள்ளது கரிசல்மனி குளம். நமதூரின் நீர் தேவையை பல வருடங்களாக போக்கிவந்ததில் இக்குளத்தின் பங்கு அளப்பரியது.

ஆனால் இக்குளம் கடந்த பத்து வருடங்களாக சரியாக பராமரிக்கப்படாததாலும் நீர் இல்லாததாலும் சீமை கருவேலங்காடாக மாறியிருந்தது. மேலும் இதனால் இக்குளம் பல சமுக விரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டது. 

இதனை அடுத்து தற்பொழுது ஒரு மாதமாக நமதூர் குளங்கள் தூர்வாரப்பட்டு 2 குளங்களுக்கு தண்ணீரும் திறக்கப்பட்டது. இதுபோல் நமதூரின் பெரிய குளமான கரிசல்மணி குளமும் தூர்வாரப்பட்டு காடுகள் கருவேல மரங்கள் வெட்டப்பட்டு அழகாய் காணப்படுகிறது.

Advertisement

Close