இளையான்குடியில் அரைஇறுதிக்கு முன்னேறியது அதிரை AFFA!

இளையான்குடியில் மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அதிரை AFFA அணி கலந்துக்கொண்டு விளையாடி வருகிறது. இதில் லீக் போட்டியில் AFFA அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று கால் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடைபெற்ற கால் இறுதி போட்டியில் AFFA அணியை எதிர்த்து திண்டுக்கல் அணி விளையாடியது. இதில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் ஆட்டம் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து டைப்ரேக்கர் முறைபடி AFFA அணி 5-4 கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதி போட்டிக்கு முன்னேறியது.

அரைஇறுதி போட்டி வரும் 27 அன்று கீழக்கரை அணியை எதிர்த்து AFFA அணி விளையாட உள்ளது.

Close