அதிரை எவர்கோல்டு காம்ப்லக்ஸில் நடைபெற்ற மருத்துவ முகாம் (படங்கள் இணைப்பு)

அதிரை AVR மெடிக்கல்ஸ் மற்றும் தஞ்சை டெல்டா கேர் மருத்துவமனை இணைந்து நடத்தும் காது, மூக்கு, தொண்டை, அலர்ஜி, ஆஸ்துமா மற்றும் குறட்டைக்கான மருத்துவ முகாம் நாளை (21/09/2014 – ஞாயிற்று கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நமதூர் பேருந்து நிலையம் எதிரில் உள்ள எவர் கோல்டு காம்பிலக்ஸில் நடைபெற்றது.

இதில் தஞ்சை மருத்துவகல்லூரி உதவி பேராசிரியர் DR.A.அமிர்தகனி அவர்கள் காது கேளாமை, காதில் சீழ் வடிதல், மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்ச்சி, கழுத்துக் கட்டிகள், குரல் மாற்றம், சைனஸ், அடுக்குத் தும்மல் ஆகிய நோய்களுக்கும்,

திருவாருர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உதவி பேராசிரியர் DR.சுப.சிவராஜா அவர்கள் சளி, இருமல், ஆஸ்துமா, காசநோய், நிமோனியா, மூச்சுத் திணறல் மற்றும் குறட்டை ஆகிய உடல் நல குறைபாடுகளுக்கும் நாளை பரிசோதனை செய்தனர்.

இந்த மருத்துவ முகாமில் ₹1000 மதிப்புள்ள எண்டோஸ்கோபி மற்றும் நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (P.T.T) ஆகியவை இலவசமாக செய்யப்பட்டது.

இதில் நுழைவுக் கட்டணம் ₹100 வசூலிக்கப்பட்டது. இதில் அதிரையர்கள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Advertisement

Close