Advertisement

' />

பைக் மூலமாக மொபைல் சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவி ! தமிழர் கண்டுபிடிப்பு !


பைக் மூலமாக மொபைல் சார்ஜ் செய்யும் ஒரு புதிய கருவியை வடிவமைத்திருக்கிறார் சுரேஷ். இதன் விலை ரூ.249 மட்டும் .

எல்லா வகுப்பறைகளிலும் ஒரு விஞ்ஞானி சத்தமில்லாமல் உருவாகி கொண்டிருப்பான். நாம் அவனை அடையாளம்கொள்ள அவன் தனது வாழ்க்கையை அடகு வைத்து, முட்டிமோதி அவனவனாகவே வெளி வர வேண்டி இருக்கிறது.

சுரேஷ் (வயது 33) சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர். ஒரு சாதாரன குடும்பத்தை சேர்ந்தவர் .இவரை இளம் விஞ்ஞானி என்றே  கூறலாம்.இவர் தற்போது மிக அருமையான ஓன்றை கண்டுபிடித்துள்ளார் . இரு சக்கர வாகனத்தின் மூலம் மொபைல்களுக்கு சார்ஜ் ஏத்தும் ஓன்றை வடிவமைத்துள்ளார் .வெகு தூரம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ஏதுவாக கண்டுபிடித்துள்ளார்.   

கால சுழற்சியில் எங்கெங்கோ ஓடி, முட்டிமோதி ஒரு சாமானியன் படும் அத்தனை கஷ்டங்களையும் தாண்டி, ஒவ்வொரு நாளும் தன்னை புதிப்பித்து கொண்டு இன்று ஒரு புதிய உருவாக்கத்துடன் களம் இறங்கியிருக்கிறான்.பத்திரிகை நண்பர்களும், ஊடக நண்பர்களும் சுரேஷை அடையாளாப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொண்டு, நண்பனின் பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

இக்கருவி வேண்டுவோர் சுரேஷை தொடர்பு கொள்ளவேண்டிய எண்   +91-98401 33363


Advertisement

Close