Advertisement

' />

தஞ்சையில் மாற்றுத்திறன் முஸ்லீம் பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சாலை மறியல் !



தஞ்சையில் மாற்றுத்திறன் பெண்ணை பலாத்காரம் செய்தவர்கள் மீது நடவடிக் கை எடுக்க கோரி உறவினர்கள் தஞ்சையில் நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தஞ்சை கீழவாசல் காமராஜர் சிலை அருகே நேற்று 50க்கும் அதிகமானவர்கள் ஒன்று திரண்டு திடீர் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த டவுன் டிஎஸ்பி கண்ணன், கிழக்கு போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். 



இதுகுறித்து சாலை மறிய லில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: தஞ்சை கீழவாசல் சின்னையாபிள்ளை தெரு வைச் சேர்ந்தவர் அப்துல்அஜீத். இவரது மகள் பானு (32). மாற்றுத்திறனாளி (வாய்பேச முடியாதவர்) இவர் வறுமை காரணமாக சிராஜீதின் நகரில் உள்ள துணி வியாபாரி ஒருவரின் வீட்டிற்கு வேலைக்கு சென்றார். துணி வியாபாரி ஆபிரகாம் பண்டிதர் நகரில் துணிக் கடை வைத்துள்ளார். இந்நிலையில் அவர் பானுவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் பானு 8 மாத கர்ப்பம் அடைந்தார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று 8 மாத சிசுவை கொலை செய்து விட்டனர். அதன்பின்னர் அந்த பெண்ணின் உறவினர்களிடம் சமாதானம் பேசி பிரச்னையை தீர்க்க முயற்சி செய்துள்ளார். 


ஆனால் அந்த பெண் சிலருடன் சேர்ந்து சில தினங்களுக்கு முன் தஞ்சை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனை தெரிந்து கொண்ட துணி வியாபாரி பானுவின் உறவினர்களை அழைத்து மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்கிடையே நேற்றுமுன்தினம் இரவு பானுவை 4 பேர் கொண்ட கும்பல் காரில் ஒரத்தநாடு பகுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பானுவின் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. எனவே சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சேர்ந்து சாலை மறியல் நடத்தினோம். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதைத் தொடர்ந்து மறியல் போராட்டத்தை கை விட்டு புகார் கொடுக்க செல்கிறோம் என்று கூறினர்.

இச்சம்பவம் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Close