அதிராம்பட்டினம் கடலில் பிடிபடும் மருத்துவகுணம் வாய்ந்த சங்குகள் !

   அதிராம்பட்டினம் ,ஏரிப்புறக்கரை ,கீழத்தோட்டம் ,மறவக்காடு ஆகிய பகுதிகளிலிருந்து மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர் .மீன்கள் ,நண்டுகள் .இறால்கள் பிடிப்பதற்கு விரிக்கும் வலையில் சங்குகளும் பிடிபடுகிறது .சங்குகளில் பால் ,குளிர்,வலம்புரி ,ஐவிரல் .மொழுக்கை,வெள்ளை முள்ளி ,கோவை ,கோம்பை ,காரம்  என பலவகைகள் உள்ளன .அதிராம்பட்டினம் கடல் பகுதியில் பால் ,வெள்ளை முள்ளி ,கோவை ,கோம்பை ,கார சங்குகள் உள்ளன .இவற்றில் பால் ,வெள்ளை முள்ளி சங்குகள் தான் அதிகளவில் பிடிபடுகிறது .  

-dinakaran   

Advertisement

Close