அதிரை சமூக ஆர்வலரும் தி.மு.க நகர முன்னால் நிர்வாகியுமான அபூபக்கர் அவர்கள் மரணம்!

அதிரையை சேர்ந்த அபூபக்கர் அவர்கள் நமதூர் அரசு மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளாக உடல் நலக் குறைவால் மிகவும் கஷ்டப்பட்டு வந்தார்.

இவருடைய தந்தை பெயர் முகம்மது கோயா, அவர்கள் அதிரையில் பல ஆண்டுகளுக்கு முன் புகழ்பெற்ற நாட்டு மருத்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அபூபக்கர் அவர்களுடைய மகன் தான் மருத்துவமனையிலேயே தங்கி உதவிசெய்து வந்தார்.

இவருடைய இளமை காலத்தில் இவர் நமதூர் ஊர் காவல் படையில் பணிபுரிந்து பல சேவைகள் ஆற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் அதிரை நகர தி.மு.க வின் முன்னால் நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரின் மருத்துவ தேவைக்கு உதவி செய்யுமாறு கடந்த மார்ச் மாதம் இவரிடம் ஒரு பேட்டி எடுத்து அதிரை பிறை செய்தியும் காணொளியும் பதிந்திருந்தோம்.

தற்பொழுது சில நாட்களாக இவர் அதிரை கடற்கரை தெரு மஸ்னி நகரில் உள்ள வீட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் உடல் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Advertisement

Close