திருச்சி ஏர்போர்டிற்க்கு வரும் முஸ்லிம்கள் தொழுவதற்காக TNTJ பள்ளிவாசல் திறப்பு

imageதிருச்சி விமான நிலையத்திற்க்கு வருவோரின் கவனத்திற்க்கு…..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ….!!

அன்பான சகோதரர்களே.! திருச்சி விமான நிலையம் வருவோர் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் தொழுகைப் பள்ளியை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை.

விமான நிலைய நுழைவு வாயிலுக்கு நேராக அமைந்துள்ள வழியில் சென்று இடது புறமாக மூன்றாவது சந்தில் (இரண்டாவது படத்தில் உள்ளது போல்) ஒரு வழிகாட்டி போர்ட் அமைந்திருக்கும்.

அங்கிருந்து சற்று தூரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏர்போர்ட் கிளையின் தொழுகைப் பள்ளி உள்ளது.

ஐவேளை தொழுகைக்கான நேரத்தில் எப்போது சென்றாலும் இன்ஷா அல்லாஹ் தொழுது கொள்ளலாம்…..

இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து தெறியப்படுத்துங்கள்…..!

Close