அதிரையில் சிறப்பாக நடைபெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாடு! (படங்கள் இணைப்பு)

அதிரை கடற்கரைதெரு அமீரக அமைப்பு & கடற்கரைத்தெரு ஜமாத் இணைந்து இந்த ஆண்டு 5 வது முறையாக நடத்தும் மாபெரும் கல்வி விழிப்புணர்வு மாநாடு இன்று மாலை 6 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி மைதானத்தில் துவங்கி நடைபெற்றது. இதற்கு ஹாஜி S.M.அக்பர் அவர்கள் தலைமை தாங்கினார். இதற்கு கடற்கரைத்தெரு ஜமாத் தலைவர் Er.அஹமது அலி மற்றும் பேரூராட்சி தலைவர் S.H.அஸ்லம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பயனுள்ள கல்வி என்ற தலைப்பில் அம்மாபட்டினம் அன்னை கதிஜா மகளிர் கல்லூரி தாளாலர் பேரா.சயிதா பானு அவர்களும் ஆசைபடுங்கள் என்னும் தலைப்பில் பிரபல ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகரும், பிரபல தொலைக்காட்சி விவாத பேச்சாளருமான சகோ.ஆளூர் ஷானவாஸ் ஆகியோர் சிறப்புறையாற்றுவதற்காக கலந்துக்கொண்டனர்.

இதில் இந்த ஆண்டு பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் சாதனை நிகழ்த்திய அதிரை மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. முன்னதாக ஜமீல் M.சாலிஹ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். இதில் அதிரையை சேர்ந்த ஆண்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்துக்கொண்டனர். இறுதியாக கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயலாளர் ஜாஹிர் ஹுசைன் அவர்களின் நன்றியுறையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கடற்கரைத்தெரு ஜமாத்தார்கள், அமீரக அமைப்பு நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.image
image

image image image image image image image image image image

Close