அதிரை பிறை நேயர்களே! உங்கள் வீட்டில் 10ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளார்களா?

education 10 adirai

 கடந்த 25 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அதிரையை பொருத்தவரை பல மாணவ மாணவிகள் 400 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் தேர்ச்சியும் பெற்றிருந்தனர்.

இதில் தமிழக அளவில், மாவட்ட அளவில் சாதனை படைக்கும் மாணவ மாணவிகளை தொலைகாட்சிகளில் பாராட்டி வருகின்றனர். இதனை பார்க்கும் நமது பிள்ளைகளின் ஏக்கத்தை போக்குவதற்காகவும் அவர்களின் திறமையை உலகறிய செய்வதற்காகவும் அதிரை பிறையில் கடந்த 4 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகளில் சாதனை படைக்கும் மாணவர்களை வெளிகொணரும் முயற்ச்சியில் பள்ளிவாரியாக செய்திகள் சேகரித்து முதல் மூன்று மதிப்பெண்களை பெறும் மாணவ மாணவிகளின் பெயர் விபரங்களை பதிந்து வருகிறோம். இதனை பார்க்கும் அந்த மாணவர்களும் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களும் அளவற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். இதனால் அடுத்தடுத்த ஆண்டுகளில் மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் பெறவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இதில் இந்த மூன்று இடங்களுக்கு அடுத்து நூலிழையில் மதிப்பெண்கள் குறைந்து 400 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஒரு ஏக்கம் இருக்கும். நாமும் முதல் மூனறு இடங்களை பிடித்தால் இணையதளங்களில் வந்து இருக்கலாமே என்று… இதுபோன்றவர்களின் பெயர் விபரங்களை நமது தளத்தில் பதிய நாம் விரும்பினாலும் சிரமமும், நேரமிம்மை காரணமாகவும் பதியமுடியாமல் விட்டுவிடும் சூழல் ஏற்படுகின்றது.

இது போன்று 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற மாணவர்களின் ஏக்கத்தை போக்குவதற்காகவும் அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் அவர்களின் பெயர் விபரங்கள் ஆகியவற்றை வெளியிடஉள்ளோம்.

இது போன்று இந்த ஆண்டு வெளியான 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் உங்கள் வீட்டு பிள்ளைகள், நண்பர்களின் பிள்ளைகள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருந்தால் கீழுள்ள எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பவும்.

அல்லது https://www.facebook.com/presspirai இந்த லிங்கில் சென்று நமது முகநூலுக்கு மேலுள்ள படத்தில் நாம் கேட்ட விபரங்களை ஆனுப்பவும்.

குறிப்பு: மாணவிகளின் புகைப்படங்களை அனுப்ப வேண்டாம். வந்தாலும் புகைப்படம் பதியப்படாது.

Close