இளையாங்குடியில் இறுதிப் போட்டியில் அதிரை AFFA அணியினர் தோல்வி!

இளையான்குடியில் மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அதிரை AFFA அணி கலந்துக்கொண்டு விளையாடி வருகிறது. இதில் லீக் போட்டியில் AFFA அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து அதிரை AFFA அணியை எதிர்த்து நேற்று அரை இறுதி போட்டியில் கீழக்கரை அணி விளையாடியது. இதில் அதிரை  AFFA அணியினர் சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதனை தொடர்ந்து இன்று அதிரை AFFA அணிக்கும் வேளாங்குடி அணிக்கும் நடைபெற்றது. இதில் அதிரை AFFA அணி 1-0 என்ற கோல் கணக்கில் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்தது.

இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வேளாங்குடி அணியினருக்கு  முதல் பரிசான 50,000 ரூபாயும் அதிரை AFFA அணிக்கும் இரண்டாவது பரிசான 25,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அதிரை AFFA அணியினருக்கு அதிரை பிறை சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Close