தம்மாமில் TNTJ நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் ! அதிரையர்கள் பலர் பங்கேற்பு ! (புகைப்படங்கள் இணைப்பு)

இன்று TNTJ (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்) தம்மாம் சென்ட்ரல் ஹாஸ்பிட்டலில் நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் இனிதே நிறைவு பெற்றது. 

இதில் மதம்,மொழி,மாநிலம்,நாடு கடந்த பலவாறான மக்கள் இரத்ததான முகாமுக்கு வந்திருந்து இரத்தம் கொடுத்து சென்றார்கள்.

இணையதளமான பேஸ்புக்கின் அழைப்பை ஏற்றும் இரத்தம் கொடுக்க பலர் வந்திருந்தது ஆச்சர்யத்தையும் இணையம் தவிர்க்க முடியாத இணைப்பு பாலமாக மாறிவிட்டதையும் காட்டுகிறது.

தம்மாம் சென்ட்ரல் ஹாஸ்பிட்டலில் மட்டும் சுமார் 180 க்கும் மேற்பட்டவர்கள் இரத்தம் அளித்திருந்தனர்.

இதில் நம் அதிரையர்களும் கலந்துகொண்டு தன் பங்கை செலுத்தினர்.

இன்னும் பலர் இரத்தம் கொடுக்க வந்துகொண்டிருந்தாலும் நேரம் இல்லாத காரணத்தினால் கனிவுடன் திருப்பி அனுப்பபட்டனர்.

TNTJ தம்மாம் மண்டலம் நடத்திய இரத்ததான முகாம் தம்மாம் சிட்டியில் மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள ஜுபைல்,கோபார்,கத்தீஃப் போன்ற கிளைகளிலும் ஒரே நாளில் நடைபெற்றது.

செய்தி மட்டும் புகைப்படம் உதவி:  
அதிரை_உபயா

Advertisement

Close