கலைஞர் டிவி விவாத நிகழ்ச்சியில் அசத்திய அதிரை சாலிஹ்! (வீடியோ இணைப்பு)

13015233_549478761923348_4825788302081603439_nஅதிரை SAM நகரை சேர்ந்தவர் Z.முஹம்மது சாலிஹ். SDPI கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இலியாஸ் அவர்களின் இளைய சகோதரர். பத்திரிக்கை துறையில் ஆர்வம் கொண்ட இவர் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் செய்தியாளராக உள்ளார். மேலும் இவர் சென்னை ஹிந்துஸ்தான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஜோர்னலிஸம் & எலெக்ட்ரானிக்ஸ் மீடியா பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இவர் பிரபல தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் நடத்தப்பட்டு வரும் விவாத நிகழ்ச்சியான “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்னும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கல்வி கொள்ளை குறித்து சிறப்பான முறையில் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். இது கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.

இவர் ஊடகத்துறையில் மேலும் சாதிக்க அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

முழு நிகழ்ச்சியை கீழுள்ள வீடியோவில் பார்க்கலாம்…

Close