அதிரையில் சிறப்பாக நடைபெற்ற அல்-லதீஃப் பள்ளியின் திறப்பு விழா!

அதிரை கள்ளுக்கொள்ளை VKM ஸ்டோர் பின்புறமாக அல்-லத்தீஃப் என்னும் பெயரில் புதிய பள்ளிவாசல் கட்டப்பட்டது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்த பள்ளிவாசல் திறப்பு விழா அஸர் தொழுகைக்கு பிறகு துவங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அல்ஹாஜ் M.S.அஹ்மத் அமீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.

அதிரை வாழ் அனைத்து மஸ்ஜித் நிர்வாகிகள் தலைமை தாங்கினார்கள். இதில் இலங்கை இப்னு உமர் ஹதீஸ் கல்லூரியின் தலைவரும், இலங்கை அர்ரஷீத் ஷரீஅ கல்லூரி பேராசிரியருமான மௌலானா அப்துல் ஹாலிக் தேவ்பந்தி அவர்கள் கலந்துக்க் சிறப்புறையாற்றினார்கள்.

சென்னை ஜாமி உல் ஹுதா அரபிக்கல்லூரியினுடைய முதல்வரும், சென்னை மஸ்ஜித் பீர் குராசா வின் தலைமை இமாமுமாகிய மௌலானா சதீதுத்தீன் பாகவி அவர்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துறை வழங்கினார்கள்.

இறுதியாக அதிரை மஸ்ஜிதுல் இஜாபாவின் இமாம் மௌலானா அப்துல் ஹாதி ஃபாழில் பாகவி அவர்கள் நன்றியுறை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.13344699_1111867968877979_6437476999626970015_nimage

Close