அதிரை சிட்னி கிரிக்கெட் தொடரில் சுழற்கோப்பையை கைப்பற்றியது மஞ்சயவல்! (படங்கள் இணைப்பு)

அதிரை சிட்னி ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பாக கடந்த ஒரு வாரமாக 9 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றன. ஃபிக்ஸட் பேலட் முறையில் நடத்தப்பட்ட இத்தொடரில் 16 அணிகள் கலந்துக்கொண்டு விளையாடின. இதில் சிறப்பாக விளையாடி அறையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றன. இதில் அதிரை சிட்னி ஃப்ரெண்ட்ஸ் அணியும், FCC மஞ்சவயல் அணிகளும் விளையாடின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் FCC மஞ்சவயல் அணியினர் அபார வெற்றி பெற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அதிமுக தஞ்சை மாவட்ட சிறுபாண்மை தலைவர் அப்துல் அஜீஸ் அவர்கள் கலந்துகொண்டு பந்தை அடித்து இறுதி போட்டியை துவங்கி வைத்ததுடன் வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும், பதக்கங்களையும் வழங்கினார்.

முதல் பரிசை FCC மஞ்சவயல் அணியினரும் இரண்டாவது பரிசை அதிரை சிட்னி ஃப்ரெண்ட்ஸ் அணியினரும், மூன்று மற்றும் நான்காவது பரிசுகளை அதிரை ASC அணியினரும் சிட்னி-B அணியினரும் பெற்றனர்.

மேலும் இதில் தொடர் நாயகன் விருதை மஞ்சவயல் வீரர் ஜெரியும், சிறந்த மட்டையாளருக்கான விருதை சிட்னி அணி கேப்டன் ரியாஸ் அவர்களுக்கும், சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை சிட்னி வீரர் அபுதாஹிர் அவர்களுக்கும், சிறந்த அணி தலைவருக்கான விருதை அதிரை ASC அணி கேப்டன் ஜாசிம் அவர்களுக்கும், சிறந்த வீரருக்கான விருதை அதிரை ASC அணியை சேர்ந்த யாக்கூப் அவர்களுக்கும், சிறந்த இளம் வீரருக்கான விருதை சிட்னி அணி வீரர் பிலால் அவர்களுக்கும், சிறந்த தடுப்பாளருக்கான விருதை சிட்னி வீரர் சமீர் அவர்களுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டன.

தொடர்போட்டிக்கான ஏற்பாடுகளை சிட்னி அணி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

image13312879_809810385822349_6617408564111776624_nimage image787ab070-cc9f-4b57-99e5-60d8592c149f 13244864_809810189155702_3665450794324342828_n 13312879_809810385822349_6617408564111776624_n 13321952_809810155822372_4512912813429136470_n 13325541_809810142489040_5512063379081837616_n 13335795_809810292489025_1077984240651757797_n 13339523_809810252489029_8665674866801640345_n 13344755_809810309155690_8011185595101094367_n

Close