Adirai pirai
posts

இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக வாழ்வார்கள், இந்தியாவுக்காக இறப்பார்கள்-பிரதமர் நரேந்திர மோடி !



இந்திய முஸ்லீம்களின் தேசப்பற்று பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமராக பதவியேற்ற பிறகு முதன் முறையாக தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த பிரதமர் நரேந்திர மோடி, அல்கொய்தா அமைப்பு இந்திய முஸ்லீம்கள் தங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என மாயத்தோற்றத்துக்கு இரையாகியுள்ளனர். இந்திய முஸ்லீம்கள் இந்தியாவுக்காக வாழ்வார்கள் இந்தியாவுக்காக உயிரையும் கொடுப்பார்கள் என தெரிவித்தார்.

இந்த மாத இறுதியில் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க சுற்றுப்பயணம் குறித்து பேசிய அவர், இந்தியாவுக்கும் அமெரிக்காவும் கலாச்சாரம் மற்றும் வராலாற்று அடிப்படையில் பல்வேறு இருக்கின்றனர். இருப்பினும் இந்தியா- அமெரிக்க உறவில் சில ஏற்ற இறக்கங்கள் உள்ளன என்பதை ஒப்புக்கொண்ட பிரதமர் மோடி, 21 ஆம் நூற்றாண்டில் இந்திய அமெரிக்க உறவில் புதிய வடிவம் கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.



Advertisement