அதிரை அருகே அரிவாள் வெட்டு!

அதிரை அருகே உள்ள தொக்காலிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் சிவக்குமாரும், தி.மு.க. சார்பில் பாண்டியனும் போட்டியிட்டனர்.
இந்த ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் தொக்காலிக்காடு ஊராட்சிக்கும் மகிலங்கோட்டை ஊராட்சிக்கும் சமநிலையில் வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மகிலங்கோட்டை ஊராட்சி தலைவர் சுப்புமாறன், காலனி பகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை அ.தி.மு.க. வேட்பாளர் சிவக்குமார் தட்டிக்கேட்டார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சிவக்குமாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிரை போலீசில் புகார் செய்யப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
இதுகுறித்து சுப்புராறன் கூறும்போது, காலனி பகுதியில் உள்ள ஜெயபால் என்பவரை பார்க்க வந்தோம். அவருக்கு பணம் கொடுக்க வேண்டியது இருந்தது. இதனை அ.தி.மு.க.வினர் தவறாக நினைத்து தகராறில் ஈடுபட்டனர் என்றார்.

Advertisement

Close