ஆண்ட்ராய்டு செல்போன் ரூ.9 லட்சத்தில் அறிமுகம்!

உலகின் விலை உயர்ந்த ஆண்ட்ராய்டு செல்போன் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இஸ்ரேலைச் சேர்ந்த சிரின் லேப்ஸ் என்ற நிறுவனம் ’சோலாரின்’ என்ற பெயரில் ஆண்ட்ரய்டு செல்போனை 14 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 9 லட்சத்துக்கும் அதிகமாகும்.
தகவல் தொடர்புகளைப் பாதுகாக்க உலக நாடுகளின் ராணுவ அமைப்புகள் பயன்படுத்தும் அதிநவீனத் தொழில்நுட்பத்துடன் இந்த செல்போன் வெளியாகியுள்ளது. இதுவரை வெளியான செல்போன்களில் இல்லாத அளவுக்கு, எந்தவிதமான சைபர் தாக்குதல்களைத் தாக்குப்பிடிக்கும் வகையிலும், தகவல்களைப் பாதுகாக்க அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

image

Close