Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரையில் சாலை விபத்துக்குள்ளான கமர்தீன் மரணம்!

Untitled-1மல்லிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் ஜாபர் மற்றும் கமர்தீன். இருவரும் கடந்த 18 ஆம் தேதி அதிரைக்கு வந்துவிட்டு  இரவு தங்கள் இரு சக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். இந்நிலையில் இருவரும் அதிரையை அடுத்த எறிப்புறக்கரை அருகில் சென்றுக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் சிறுபாலம் மீது மோதினர். இதில் இருவருகும் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

 அதிரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு இருவருக்கும் தீவிர முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக கமர்தீன் அவர்கள் மூலமாக தஞ்சாவூருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்குள்ள மீனாட்சி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை அரசு மருத்துவமனைக்கு கமர்தீன் மாற்றப்பட்டார்.

இதனை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று கமர்தீன் அவர்கள் வஃபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜியூன்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy