ரமலானுக்காக தயாராகும் மஸ்ஜிதுல் ஹாரம் மற்றும் மஸ்ஜிதுன் நபவி!

எதிர்வரும் புனித ரமலான் மாதம் முன்னிட்டு மக்கா-கஃபதுல்லாஹ்வும், மதீனா- மஸ்ஜிதுன் நபவிய்யும் சுத்தம் செய்யப்பட்டும் தயார்படுத்தப்பட்டும் வருகின்றன.
அதிகளவிலான யாத்திரியர்கள் இரு புனிதஸ்த்தலங்களில் ஒன்று கூடவிருப்பதனால் சுத்தம்,சுகாதார விசயங்களில் கூடுதல் கவனம் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இந் நாட்களில்பணிபுரிவதற்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
கார்பட்(விரிப்பு)கள், ஜம்ஜம் நீர் அருந்தும் பகுதிகள், இஃதிகாப்(f), தவாப்(f) செய்யும் இடங்கள் என பல்வேறுபட்ட வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இரு புனிதஸ்த்தலங்களும் ரமழான் மாத வருகைக்காக தயாராகின்றன.

 – அரப் நியூஸ்

Close