அதிரையில் அரசு பள்ளியில் புதிய பாடபுத்தகங்கள் வழங்கிய அதிமுக வினர் (படங்கள் இணைப்பு)

நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட்டன. அதனை தொடர்ந்து ஏராளமான மாணவ மாணவிகள் பள்ளிகளுக்கு மகிழ்ச்சியுடன் வருகை தந்தனர்.

தமிழத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் சீருடைகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்றைய தினம் அதிரை அரசு எண் 1 பள்ளியில் புதிய பாடபுத்தகங்களை அதிரை அதிமுக வினர் வழங்கினர். இதில் அதிமுக நகர செயலாளர் பிச்சை, நகர துணை செயலாளர் தமீம், வார்டு கவுன்சிலர் குமார், நகர பாசரை செயலாளர் அஹமது தாஹிர் ஆகியோர் உடனிருந்தனர்.image image image

Close