அதிரை மக்களை குதூகளப்படுத்திய குளிர் மழை!

அதிரையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோடைவெயில் மக்களை வாட்டி வந்தது. இதன் காரணமாக அதிரையில் பகல் நேரங்கள் மக்கள் வெளியில் செலவதை மக்கள் தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று இஷா தொழுகைக்கு பிறகு நல்ல மழை பெய்தது.

ஆனால் மீண்டும் காலை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டாலும் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் தென்பட்டது. இந்நிலையில் மக்ரிப் தொழுகை நேரத்தில் அதிரையில் சுமார் 30 நிமிடங்கள் சாலைகளில் நீர் தேங்கும் அளவிற்கு மழை பெய்தது. இதனால் அதிரையில் குளிர்ச்சியும் மக்கள் மனதில் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.

ரமலானுக்கு இன்னும் ஓரிரு தினங்கள் மட்டுமே உள்ள நிலையில் அதிரையில் பெய்த இந்த மழை மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

Close