Adirai pirai
posts

மகப்பேறு மருத்துவமனை அமைக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

 மகப்பேறு மருத்துவமனை அமைக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக  மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

திருச்சி மாநகர் 49வது வார்டு பகுதியில் மகப்பேறு மருத்துவமனை அமைக்க கோரி மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை :

மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மாநகர் மாவட்டம் 49வத வார்டு பகுதியில் சுமார் 10,000 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.இவர்கள் அவசர காலங்கலில் பொதுமருத்துவ மனைக்கு செல்ல மிகவும் சிரமமான சூழ்நிலை நிலவுவதால் இப்பகுதியிலேயே
மகப்பேறு மருத்துவ மனை அமைக்க ஏற்கனவே மாநகராட்சி ஆனையர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனை வேலை துரிதப்படுத்துவதற்காக மமக மாவட்டச் செயலாளர் ஃபைஸ் அஹமது அவர்களின் தலைமையில் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் மாவட்டச் செயலாளர்(தமுமுக) இப்ராஹிம்ஷா,வர்த்தக சங்க மாவட்டத் தலைவர் அஹமது கபீர்,IPP மாவட்டச் செயலாளர் முஹம்மது பாபு ஆகியோர்களின் முன் நிலையிலும்
வார்டு தலைவர் அப்துல் நாசர்,செயலாளர் ஷபீர்,பொருளாளர் முபாரக் மற்றும் இஸ்மாயில்,இப்ராஹிம்ஷா,சேட்டு,ரசீது மற்றும் மன்சூர் ஆகியோர்கள் மாவட்ட துணைஆட்சியர் அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர்.
விரைவில் மருத்துவ மனை கட்ட ஆவணம் செய்யப்படும் என மாவட்ட துணைஆட்சியர் உறுதியளித்துள்ளார்.
-திருச்சி.ஃபிரோஜ் கான்.

Advertisement