அதிரையில் ரமலானில் சீராக மின்சாரத்தை வழங்க கோரி அதிரை பிறை சார்பாக மனு!

imageதமிழகத்தில் இன்று அல்லது நாளை முதல் ரமலான் மாத முழுவதும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் 30 நாட்கள் நோன்பு நோற்க உள்ளனர். அதிரையை பொறுத்தவரை இஸ்லாமிய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். எனவே இந்த ரமலான் மாதத்தில் பகல் நேரங்களில் தூங்குவதற்கும், உணவுகள் சமைப்பதற்க்கும், இரவு நேரங்களில் வணக்க வழிபாடுகள் செய்வார்கள். மேலும் இந்த அண்டு ரமலான் மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் ஜூன், ஜூலை மாதங்களில் வருகிறது. அவர்களுக்கு மின்சார வசதி இன்றிமையாத ஒன்று. எனவே இதனை கருத்தில் கொண்டு அதிரையில் ரமலான் மற்றும் பெருநாள் அன்று மின்சாரம் தடை செய்யாமல் இருக்கவும், மாதாமாதம் சீரமைப்பு பணிகளுக்காக செய்யப்படும் மின் தடையை அடுத்த மாதம் மேற்கொள்ளுமாறும் அதிரை துணை மின் பொறியாளரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

 

Close